Wednesday, March 30, 2011

போலீஸ் ஜீப்பில் உயர் அதிகாரிகளே பணம் கடத்தல்


வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க காவல்துறை அதிகாரிகளே ஜீப்பில் பணம் கடத்து கிறார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

தமிழகம் முழுவதும் வாக்கா ளர்களுக்கு பணம் கொடுக்க அனைத்துவிதமான வழிகளையும் ஆளுங்கட்சியினர் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். இந்நி லையில் தேர்தல் ஆணையம் தமிழ கம் முழுவதும் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பணம், பொருட்கள் என பல வடிவங் களில் வாக்காளர்களுக்கு கொடுப் பதற்காக ஆளுங்கட்சியினர் கொண்டு சென்றவற்றை பறிமுதல் செய்தனர். கோடிக்கணக்கான ரூபாய் பெறுமான பணம் மற்றும் பொருட்களை தேர்தல் ஆணை யம் கைப்பற்றியது. தேர்தல் விதி கள் கறாராக அமல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை உட்பட சில ஆட்சித்தலைவர்கள் மாற்றப் பட்டு, நியாயமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்தின் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இதனால் ஆத்திரமடைந் துள்ள திமுக தலைவரும் முதல மைச்சருமான கருணாநிதி, தேர் தல் ஆணையம் எதிர்க்கட்சி போல செயல்படுகிறது என்று ஆணையத்தின் மீது பாய்ந்தார். மதுரையில் அவரது மகனும் மத்திய அமைச்சருமான மு.க.அழ கிரி, மாவட்ட ஆட்சியர் மீதும் தேர்தல் அலுவலர்கள் மீதும் பாய்ந்துள்ளார். தேர்தல் விதி களை முழுமையாக அமல்படுத்து வதால் தோல்விபயம் அடைந் துள்ள திமுகவினர் மதுரை அருகே மாவட்ட ஆட்சியரின் உருவ பொம்மையை எரித்த சம்பவமும் கூட நடந்துள்ளது.

கீழ்வேளூர் உள்ளிட்ட தொகு திகளில் காவல்துறை வாகனத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்லப்படும் சட்ட விரோத செயலுக்கு அதிகாரிகள் துணைபோவது குறித்து புகார் எழுந்துள்ளது. மதுரையிலும் இதே புகார் எழுந்துள்ளது. தமி ழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆளுங்கட்சியினரின் வாகனங் கள், அவர்களது ஆதரவாளர்க ளின் வாகனங்கள், பினாமிகளின் வாகனங்கள் போன்றவற்றில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற் காக பணம் மற்றும் பொருட்கள் கடத்தப்பட்டதை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையி னர் கைப்பற்றியதால் அதிர்ந்து போன திமுக-காங்கிரஸ் கூட் டணியினர், 108 ஆம்புலன்ஸ் வாக னம் மூலமும் பணம் கடத்த முயற்சித்தனர்.

இந்நிலையில், அனைத்து வழி களும் அடைக்கப்பட்ட நிலை யில், தங்களுக்கு சாதகமான காவல்துறை அதிகாரிகளின் வாக னங்களிலேயே பணம் மற்றும் பொருட்களை கடத்துவதற்கு முனைந்துள்ளனர்.

இதை சென்னை உயர்நீதிமன் றத்தில் தேர்தல் ஆணையமே பகி ரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி தகவல்

இந்தப் பின்னணியில் தேர் தலை முன்னிட்டு வாகனச் சோத னை நடத்துவதற்கு தடை விதிக்கக் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத் தில் தில்லை நடராஜன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந் தார்.

இந்த வழக்கு, தலைமை நீதி பதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு செவ்வாயன்று விசார ணைக்கு வந்தது.

தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகளுக்கு ஆதரவாகவே வெற்றிச்செல்வன் என்ற வழக்க றிஞர் பொது நலவழக்கு தொடர்ந் திருந்தார். அவர் தன் மனுவில் தலைமை தேர்தல் கமிஷனின் உத் தரவுப்படி தமிழ்நாட்டில் போது மான அளவுக்கு வாகனச் சோத னை செய்வதற்கு பறக்கும்படை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வேட்பாளர்களின் செலவை கண்காணிக்கும் குழு வின் எண்ணிக்கையையும் அதிக ரிக்க வேண்டும் என்று கூறியிருந் தார்.

இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி அறிக்கை ஒன்றை நீதி பதியிடம் கொடுத்தார். பிறகு அவர் வாதாடுகையில் கூறியதாவது:-

தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவே பறக்கும் படைகள் அமைத்து வாகனச் சோதனை நடத்தப்படுகிறது என் றாலும் போலீஸ் ஜீப்பிலேயே பணத்தை கடத்துகிறார்கள். அந்த பணம் எங்கிருந்து பெறப்பட் டது? எங்கே எடுத்துச் செல்லப் படுகிறது? எதற்காக பணம் கொண்டு செல்லப்படுகிறது? பணத்தை கொண்டு செல்ல கூறி யது யார்? என்பது குறித்து விசா ரிக்கப்பட்டது. அப்போது கிடைத்த தகவல்களால் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அடைந்தது. அந்த பணத்தை போலீஸ் உயர் அதிகாரிகளே எடுத்துச் செல்கின் றனர். வாக்காளர்களுக்கு விநியோ கிக்க பணம் திட்டமிட்டு கடத்தப் பட்டுள்ளது.

மத்திய அரசு அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப் படையில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. இதுவரை வாகனச் சோதனை தொடர்பாக 2900 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. தேர்தல் விதிகளை மீறியதாக 48 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன.

போலீஸ் ஜீப்பில் பணம் கொண்டு சென்ற போலீஸ் அதி காரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகளை தோல்வி அடையச் செய்யும் விதமாக சில போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையம் முதல் முறையாக தன் அதிகாரத்தை இப் போதுதான் சரியாக பயன்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கை பிடிக் காத சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இவ்வாறு வழக்கறிஞர் ராஜ கோபாலன் கூறியுள்ளார். தொடர்ந்து விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment