Wednesday, March 30, 2011

போலீஸ் ஜீப்பில் உயர் அதிகாரிகளே பணம் கடத்தல்


வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க காவல்துறை அதிகாரிகளே ஜீப்பில் பணம் கடத்து கிறார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

தமிழகம் முழுவதும் வாக்கா ளர்களுக்கு பணம் கொடுக்க அனைத்துவிதமான வழிகளையும் ஆளுங்கட்சியினர் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். இந்நி லையில் தேர்தல் ஆணையம் தமிழ கம் முழுவதும் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பணம், பொருட்கள் என பல வடிவங் களில் வாக்காளர்களுக்கு கொடுப் பதற்காக ஆளுங்கட்சியினர் கொண்டு சென்றவற்றை பறிமுதல் செய்தனர். கோடிக்கணக்கான ரூபாய் பெறுமான பணம் மற்றும் பொருட்களை தேர்தல் ஆணை யம் கைப்பற்றியது. தேர்தல் விதி கள் கறாராக அமல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை உட்பட சில ஆட்சித்தலைவர்கள் மாற்றப் பட்டு, நியாயமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்தின் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

இதனால் ஆத்திரமடைந் துள்ள திமுக தலைவரும் முதல மைச்சருமான கருணாநிதி, தேர் தல் ஆணையம் எதிர்க்கட்சி போல செயல்படுகிறது என்று ஆணையத்தின் மீது பாய்ந்தார். மதுரையில் அவரது மகனும் மத்திய அமைச்சருமான மு.க.அழ கிரி, மாவட்ட ஆட்சியர் மீதும் தேர்தல் அலுவலர்கள் மீதும் பாய்ந்துள்ளார். தேர்தல் விதி களை முழுமையாக அமல்படுத்து வதால் தோல்விபயம் அடைந் துள்ள திமுகவினர் மதுரை அருகே மாவட்ட ஆட்சியரின் உருவ பொம்மையை எரித்த சம்பவமும் கூட நடந்துள்ளது.

கீழ்வேளூர் உள்ளிட்ட தொகு திகளில் காவல்துறை வாகனத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்லப்படும் சட்ட விரோத செயலுக்கு அதிகாரிகள் துணைபோவது குறித்து புகார் எழுந்துள்ளது. மதுரையிலும் இதே புகார் எழுந்துள்ளது. தமி ழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆளுங்கட்சியினரின் வாகனங் கள், அவர்களது ஆதரவாளர்க ளின் வாகனங்கள், பினாமிகளின் வாகனங்கள் போன்றவற்றில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற் காக பணம் மற்றும் பொருட்கள் கடத்தப்பட்டதை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையி னர் கைப்பற்றியதால் அதிர்ந்து போன திமுக-காங்கிரஸ் கூட் டணியினர், 108 ஆம்புலன்ஸ் வாக னம் மூலமும் பணம் கடத்த முயற்சித்தனர்.

இந்நிலையில், அனைத்து வழி களும் அடைக்கப்பட்ட நிலை யில், தங்களுக்கு சாதகமான காவல்துறை அதிகாரிகளின் வாக னங்களிலேயே பணம் மற்றும் பொருட்களை கடத்துவதற்கு முனைந்துள்ளனர்.

இதை சென்னை உயர்நீதிமன் றத்தில் தேர்தல் ஆணையமே பகி ரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி தகவல்

இந்தப் பின்னணியில் தேர் தலை முன்னிட்டு வாகனச் சோத னை நடத்துவதற்கு தடை விதிக்கக் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத் தில் தில்லை நடராஜன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந் தார்.

இந்த வழக்கு, தலைமை நீதி பதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு செவ்வாயன்று விசார ணைக்கு வந்தது.

தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகளுக்கு ஆதரவாகவே வெற்றிச்செல்வன் என்ற வழக்க றிஞர் பொது நலவழக்கு தொடர்ந் திருந்தார். அவர் தன் மனுவில் தலைமை தேர்தல் கமிஷனின் உத் தரவுப்படி தமிழ்நாட்டில் போது மான அளவுக்கு வாகனச் சோத னை செய்வதற்கு பறக்கும்படை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வேட்பாளர்களின் செலவை கண்காணிக்கும் குழு வின் எண்ணிக்கையையும் அதிக ரிக்க வேண்டும் என்று கூறியிருந் தார்.

இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி அறிக்கை ஒன்றை நீதி பதியிடம் கொடுத்தார். பிறகு அவர் வாதாடுகையில் கூறியதாவது:-

தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவே பறக்கும் படைகள் அமைத்து வாகனச் சோதனை நடத்தப்படுகிறது என் றாலும் போலீஸ் ஜீப்பிலேயே பணத்தை கடத்துகிறார்கள். அந்த பணம் எங்கிருந்து பெறப்பட் டது? எங்கே எடுத்துச் செல்லப் படுகிறது? எதற்காக பணம் கொண்டு செல்லப்படுகிறது? பணத்தை கொண்டு செல்ல கூறி யது யார்? என்பது குறித்து விசா ரிக்கப்பட்டது. அப்போது கிடைத்த தகவல்களால் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அடைந்தது. அந்த பணத்தை போலீஸ் உயர் அதிகாரிகளே எடுத்துச் செல்கின் றனர். வாக்காளர்களுக்கு விநியோ கிக்க பணம் திட்டமிட்டு கடத்தப் பட்டுள்ளது.

மத்திய அரசு அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப் படையில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. இதுவரை வாகனச் சோதனை தொடர்பாக 2900 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. தேர்தல் விதிகளை மீறியதாக 48 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன.

போலீஸ் ஜீப்பில் பணம் கொண்டு சென்ற போலீஸ் அதி காரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகளை தோல்வி அடையச் செய்யும் விதமாக சில போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையம் முதல் முறையாக தன் அதிகாரத்தை இப் போதுதான் சரியாக பயன்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கை பிடிக் காத சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இவ்வாறு வழக்கறிஞர் ராஜ கோபாலன் கூறியுள்ளார். தொடர்ந்து விவாதம் நடந்தது.

Monday, March 28, 2011

ஊழலுக்கு நெருப்பா? பொறுப்பா? கருணாநிதிக்கு விஜயகாந்த் கேள்வி


‘நான் ஊழலுக்கு நெருப்பு’ என்று கருணாநிதி கூறுகிறார். ஆனால் அவர்தான் ஒட்டுமொத்த ஊழலுக் கும் பொறுப்பு என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறினார்.

கொளத்தூர், செங்குன்றம், பொன் னேரி தொகுதிகளில் அதிமுக வேட் பாளர்களை ஆதரித்து அவர் பிரச் சாரம் செய்தார். அப்போது அவர் கூறி யதாவது:

ஊழல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க 60க்கும், 63க்கும் பேரம் பேசி, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். அது குடும்பத்தை காப்பாற்றிக் கொள் ளும் கூட்டணி. அதற்கு கொள்கை கிடையாது. அதிமுக தலைமையிலான கூட்டணி மக்களுக்கான கூட்டணி.

தமிழகத்தை ஊழல் மாநிலமாக மாற்றி, கொள்ளை அடித்து வரும் திமுக கூட்டணியை தோல்வி அடையச் செய்யவும், நமது கூட்ட ணியை மாபெரும் வெற்றி பெறச் செய்யவும் நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் ஒரு சாரா ருக்காக செயல்படுகிறது என்று கூறும் திமுக தலைவருக்கு, தேர் தல் கமிஷனையே ஆட்டிவைக்கும் சக்தி காங்கிரசிடமே உள்ளது என் பது தெரியும். கடந்த முறை நீங்கள் வெற்றி பெற்றதற்கு தேர்தல் கமி ஷன் உதவியாக இருந்ததா?

‘நான் ஊழலுக்கு நெருப்பு’ என கருணாநிதி கூறுகிறார். ஆனால் அவர்தான் ஒட்டுமொத்த ஊழலுக் கும் பொறுப்பு. அதை பார்த்து தான், அப்போதே, சர்க்காரியா கமிஷன் அவரை, விஞ்ஞானபூர்வமான ஊழல்வாதி’ என்றது. ஊழல் செய்வதில் கருணாநிதி டாக்டராக இருக்கிறார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி ஆகியோர் பதவி யில் இருக்கின்றனர். எந்த நாட்டி லும் இதுபோன்ற அவலம் இருந்த தில்லை. ஐந்துமுறை முதல்வராக இருந்த அவர், மக்களுக்காக பெரி தாக எதையும் செய்யவில்லை. தன் குடும்பத்தினருக்கு மட்டுமே, கோடி கோடியாக சொத்து சேர்த்துவிட்டார்.

Thursday, March 10, 2011

2 எஸ்.ஐ. உட்பட 5 போலீசார் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

புதுச்சேரி, மார்ச் 3: ராணுவ வீரர் தாக்கப்பட்ட வழக்கில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 போலீசார் வருகிற 8-ந் தேதி ஆஜராக வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி ராணுவ வீரர் தாக்கப்பட்ட வழக்கில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 போலீசார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் வருகிற 8-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகரை சேர்ந்தவர் சசிகுமார். இவர் அப்போது காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றினார். கடந்த 2008-ம் ஆண்டு விடுமுறையில் புதுச்சேரிக்கு வந்த போது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த காசியம்மாள் என்ற வயதான பெண் ‘தன்னை மருமகன் பூபதி, அவரது சகோதரர் ஏழுமலை ஆகியோர் தாக்கியதாகவும், அதுகுறித்து தனது புகாரை லாஸ்பேட்டை போலீசார் பதிவு செய்ய மறுத்துவிட்டனர்’ என்றும் முறையிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சசிகுமார் கடந்த 6.10.2008 அன்று லாஸ்பேட்டை காவல்நிலையம் சென்று அந்த புகார் பற்றி விசாரித்துள்ளார். அப்போது அவரை பணியில் இருந்த போலீசார் தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், சசிகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
இதுகுறித்து தன்னை தரக்குறைவாக பேசி தாக்கி, வழக்குப் போட்ட அபோதைய லாஸ்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், ஜெயசங்கர், ஏட்டு உமையபாலன், ஊர்க்காவல் படை வீரர்கள் மோகன், இளங்கோ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சசிகுமார் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி  தண்டபாணி மெற்சொன்ன போலீசார் மீது இந்திய தணடனைச் சட்டம் 294, 323, 506 (2) 149 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் வரும் 80-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட போலிசார் அனைவரின் மீதும்
வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜரானார்.
புதுச்சேரியில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீசார் மீது வழக்குப் ப்திவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் ஏட்டு மீது நீதிமன்றத்தில் பண மோசடி வழக்கு



பெரியக்கடை காவல்நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு மீது புதுச்சேரி நீதிமன்றத்தில் பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


முத்தியல்பேட்டை பாரதிதாசன் நகரில் வசிப்பவர் ரங்கநாதன். இவர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் உள்ளார். இவருடைய மனைவி பாமா (வயது 52). இவரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் பெரியக்கடை காவல் நிலையத்தில் பணி புரியும் ஏட்டு ஜான் ரூ.1 லட்சம் கடன்  வாங்கினார். அக் கடனை  காசோலை மூலம் திருப்பி செலுத்துவதாக கூறிய ஜான்,  மூன்று மாதம் கழித்து எடுத்து கொள்ளும் வகையில் முன் தேதியிட்டு தனது  கையப்பம் இட்ட காசோலையையும் பாமாவிடம்  வழங்கியிருந்தார்.
அதன்படி மூன்று மாதம் கழித்து காசோலையை வங்கியில் போடுவதற்கு பாமா முயற்சித்தார். அப்போது ஏட்டு ஜான் தற்போது தனது வங்கி கணக்கில் பணம் இல்லை,  அடுத்த மாதம் சென்று பணத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று கூறினாராம். அதன்படி டிசம்பர் மாதம் பாமா வங்கியில் காசோலையை செலுத்தி பணம் எடுக்க முயற்சித்தார். ஆனால் ஜான் கணக்கில் பணம் இல்லாததால், காசோலை திரும்பியது.
இது தொடர்பாக பாமா கேட்ட போது, ஏட்டு ஜான் மறுத்தாராம். கடனே வாங்க வில்லை என்றும், தொலைந்து போன காசோலையை வைத்து பணம் கேட்பதாக பாமாவை கண்டித்தாராம். இதனைத் தொடர்ந்து பாமா புதுச்சேரி நீதிமன்றத்தில் கடன் பெற்று ஏமாற்றிய போலீஸ் ஏட்டு ஜான் மீது வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் ஏட்டு ஜானை வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.