Thursday, March 10, 2011

2 எஸ்.ஐ. உட்பட 5 போலீசார் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

புதுச்சேரி, மார்ச் 3: ராணுவ வீரர் தாக்கப்பட்ட வழக்கில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 போலீசார் வருகிற 8-ந் தேதி ஆஜராக வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி ராணுவ வீரர் தாக்கப்பட்ட வழக்கில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 போலீசார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் வருகிற 8-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகரை சேர்ந்தவர் சசிகுமார். இவர் அப்போது காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றினார். கடந்த 2008-ம் ஆண்டு விடுமுறையில் புதுச்சேரிக்கு வந்த போது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த காசியம்மாள் என்ற வயதான பெண் ‘தன்னை மருமகன் பூபதி, அவரது சகோதரர் ஏழுமலை ஆகியோர் தாக்கியதாகவும், அதுகுறித்து தனது புகாரை லாஸ்பேட்டை போலீசார் பதிவு செய்ய மறுத்துவிட்டனர்’ என்றும் முறையிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சசிகுமார் கடந்த 6.10.2008 அன்று லாஸ்பேட்டை காவல்நிலையம் சென்று அந்த புகார் பற்றி விசாரித்துள்ளார். அப்போது அவரை பணியில் இருந்த போலீசார் தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், சசிகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
இதுகுறித்து தன்னை தரக்குறைவாக பேசி தாக்கி, வழக்குப் போட்ட அபோதைய லாஸ்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், ஜெயசங்கர், ஏட்டு உமையபாலன், ஊர்க்காவல் படை வீரர்கள் மோகன், இளங்கோ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சசிகுமார் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி  தண்டபாணி மெற்சொன்ன போலீசார் மீது இந்திய தணடனைச் சட்டம் 294, 323, 506 (2) 149 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் வரும் 80-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட போலிசார் அனைவரின் மீதும்
வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜரானார்.
புதுச்சேரியில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீசார் மீது வழக்குப் ப்திவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment